Thursday, February 26, 2015

கரடு முரடான வாழ்க்கைப்பாதை ............



கருவாகி தாயின் வயிற்றிலே உருவம் பெற்றோம்.பிறந்தோம் வாழ்க்கையின் அடுத்த நொடி பற்றி சிந்திக்க தேவையில்லை .நமக்காக அனைவரும் . ஏன் தெருவில் நிற்பவர்கள்  கூட . மழலை மொழி கேளான் மூடன் என்றான் பாரதி .மழலையை கொஞ்சாதார் யாருமில்லர். மழலையாக எமது பயணம் தொடரும். நாட்கள் செல்லும். நாங்களும் வளருவோம்.வயதிட்கேட்ப  சுமைகளும் கூடும். பொருளாதரத்திற்கு ஏற்ப கல்வி.இப்போதெல்லாம் அதுவும் விற்பனை.ஒரு வழி தப்பியவாறு சமூகத்தை சேருகின்றோம். ஆரம்பமாகிறது எதிர்நீச்சல். மீண்டும் மழலையாக வாழ்க்கையை பயின்றவாறு ஆனால் இங்கு சற்று பயத்துடனேயே ......

ஆனால் புத்தகப்படிப்பை விட சற்று சுவாரஷ்யமாக இருக்கும். வாழ்க்கையோ எங்களுக்கு ஒவ்வொன்றையும் அணுவணுவாக பிரித்து சொல்லித்தரும். சிலவேளை  இனிப்பாகவும் சில வேளை கசப்பாகவும் நாட்கள் நகரும்.ஆனால்  இவைகளை உணருமுன் காலம் கடந்து விடும்.இயற்கையின் நியதியும் அதுவே.உலகமேன்பதோ  நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்களாக  வளம் வருவோம்.இதற்குள் அன்பு, பாசம், காதல் எனும் காட்சிகளும் அரங்கேறும். அறிந்தோ அறியாமலோ உலக மாயையில் சிக்கியவாறே.....

பரவாயில்லை அதுவும் அதனை கடந்து செல்பவர்களுக்கு மட்டும்தானே.பிரச்சினைகள் எல்லோருக்குமல்ல. பிரச்சினைகளை தேடி செல்பவர்களுக்கு  மட்டுமே என்பது எனது சொந்த கருத்து 




No comments:

Post a Comment