Wednesday, February 25, 2015

வாழ்க்கையில் வெற்றி என்பது அதிஷ்டவசமா? இல்லை முயற்சியின் பலனா ?



வாழ்க்கையில் வெற்றி என்பது அதிஷ்டவசமா ? இல்லை முயற்சியின்  பலனா ? யாருக்கும் தெரியாது.எதோ எமது சிந்தனைக்கு எட்டியவரை தெளிவாகவும் சில வேளைகளில் குழப்பமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் . ஆனால் வெற்றி தோல்விகளோ  தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. பரீட்சை முடிவகள் போல் தீர்க்கமானவை.

அண்மையில் முகப்புத்தகத்தில்  ஒரு பதிவை வாசிக்க முடிந்தது ."பெற்றோர் எதிர்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்றனர் .அனால் படித்தாலோ காலை எட்டு மணி முதல் மாலை  எட்டு மணி வரை எங்களால் ஓய்வாக இருக்க முடிவதில்லை . தொழில் என்று எம்மை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை".பல்வேறு இன்னல்கள் எனினும் சிறப்பான வாழ்க்கை. பணம் எதற்கு என்று எம்மால் கேட்க முடியாது. பணம்தான் வாழ்க்கை என்று சூழ்நிலை கைதிகளாக சில வேளைகளில்  நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . சில வேளைகளில் பெற்றோர் சகோதர்கள் கூட பணம்  என்றால்தான் எங்களை மதிக்கும் சூழ்நிலை இன்று ........... ஒரு பிரபலமான பாடல் வரி நினைவுக்கு வருகிறது .

மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே   அங்கெல்லாம் ஒரு வேஷமே 
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

ஆனால் தெளிவான உண்மை கஷ்டபட்டாதான் நன்றாக வாழ முடியுமென்பது. அதனையே பாரமாக நினைத்தால் எம்மால் கல்வி ,செல்வம் என்று சந்தோசமாக வாழமுடியாமல் பொய் விடும். ஒவ்வொருவரது வாழ்க்கை வெற்றியும் வேறு பட்டது. அடுத்தவர்களின் வெற்றி போல் எமது வெற்றி அமையாது . 

எதை எடுத்துகொண்டாலும் வாழ்கையில் தேர்வு மிக முக்கியமானது.நாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு வாழப்போகிறோம் . எதிர்காலத்தில்  என்ன தொழில் செய்ய போகிறோம் என்பது எம் கைவசம்தான் இருக்கிறது .

நாங்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.பெற்றோர் அல்ல.ஆனால்  பெற்றோர் சில வேளைகளில் எம்மேல் திணிப்பது சில வேளைகளில்சாதகமாகவும் பல வேளைகளில்  பாதகமாகவும் அமைந்து விடுகிறது. சாதகமாக அமையும் போது நாம் அதனை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் பாதகமாக அமையும் போது  எமது எதிர்காலம் சூனியமாகி விடும்.

வேலை தேடும் பலரை நாம் கடந்திருப்போம். ஒரு சிலரே தாங்கள் படித்த துறையில் வேலையை பெற்று இவ்வுலகத்திற்கு அவர்களை நிரூபித்து இருக்கிறார்கள். வேலை தேடும் பலர் சொல்லும் ஒரு வார்த்தை " எந்த வேலை என்றாலும் பரவாயில்லை".மிக முக்கியமான விடயம் எதை நாங்கள் அடைய வேண்டும் என்பது.அதில் நாங்கள் தெளிவாக இருந்தால்தான் எமது இலட்சியத்தை அடைய முடியும். நமக்கு எது வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தால் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம் கிடைத்ததே தெரியாது.

முயற்சி மிகவும் முக்கியம் அதிஷ்டம் அதை விட முக்கியம் . தெரிவு மிக மிக முக்கியம். இதனை புத்தகங்களில் கற்க முடியாது. வாழ்கையில் அனுபவ பாடத்தை  கற்கும் போது எங்களால் உணர முடியும்.





No comments:

Post a Comment